தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி ஆணையரிடம் தி.மு.க., கோரிக்கை மனு

நகராட்சி ஆணையரிடம் தி.மு.க., கோரிக்கை மனு

நகராட்சி ஆணையரிடம் தி.மு.க., கோரிக்கை மனு


ADDED : ஏப் 05, 2025 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2025 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால், நகராட்சி ஆணையர் கந்தசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

மனுவில், உருளையன்பேட்டை தொகுதி, சின்ன சுப்புராய பிள்ளை வீதி, செயின்ட் தெரேசா வீதி சந்திப்பில் சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால், மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.

எனவே சாலையின் இருபுறமும் உள்ள வாய்க்காலை சீரமைத்து, மழை நீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

புதிதாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தின் கான்கிரீட் தரை, அருகேயுள்ள ஒண்டி வீர அய்யனாரப்பன் கோவிலை விட 2 அடி உயரமாக உள்ளது.

இதனால், கோவிலின் தேர் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், கோவில் வாசலில் உள்ள கான்கிரீட் தரையை சமம் செய்து தர வேண்டும் என, கூறப்பட்டிருந்தது.

தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தக அணி துணை தலைவர் குரு, இலக்கிய அணி ஸ்ரீதர், கிளைச் செயலாளர்கள் கிரி, அகிலன், விஜயகுமார், அந்தோணி, நெல்சன், முரளி, விமல், பாபு ஆர்ட்ஸ், ராஜா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us