/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சமுதாய நலக்கூடம் அமைக்க தி.மு.க., கோரிக்கை மனு
/
சமுதாய நலக்கூடம் அமைக்க தி.மு.க., கோரிக்கை மனு
ADDED : டிச 27, 2024 06:24 AM

புதுச்சேரி: பெரியார் நகரில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவனிடம் தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன் கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:
நெல்லித்தோப்பு தொகுதி, பெரியார் நகர் முருகன் கோவில் பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய அட்டவணை இன மக்கள் வசித்து வருகின்றனர்.
அங்கு, அவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில், முருகன் கோவில் முன்புறம் பாழடைந்த சமுதாய நலக்கூடம் ஒன்று உள்ளது.
அந்த கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, மக்கள் பயன்படுத்தும் வகையில் ஆதி திராவிடர் சிறப்பு கூறு நிதியின் கீழ் அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைத்து தர ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள் கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
சந்திப்பின்போது, தொகுதி செயலாளர் நடராஜன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் அருண், ராம்குமார், கிளை துணை செயலாளர் ராஜி உட்பட பலர் உடனிருந்தனர்.