/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
/
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
ADDED : அக் 05, 2025 03:16 AM
புதுச்சேரியில் எதிர்க்கட்சியாக உள்ள தி.மு.க., வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி பலத்தோடு ஆட்சியை கைப்பற்ற வியூகம் அமைத்து வருகிறது. ஆனால், நிர்வாகிகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருப்பது கட்சி தலைமை, அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழி நடத்திச் செல்வதற்காக, மாநில பொறுப்பாளராக ஜெகத்ரட்சகன் எம்.பி.,யை நியமித்தது.
உடன் எதிர்க்கட்சி தலைவரான சிவா, தனது ஆதரவாளர்களுடன், பொறுப்பாளரை வழுதாவூர் கலிங்கமலையில் அவரது வீட்டில் சந்திக்க ஏற்பாடு செய்தார்.
அதனை அறிந்த மாநில அவைத் தலைவர் சிவக்குமார் இரவோடு இரவாக சென்னை சென்று, ஜெகத்ரட்சகனை சந்தித்தார். மறுநாள், எதிர்க்கட்சி தலைவர் சிவா மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்தனர்.
தலைமை செயற்குழு உறுப்பினர் காந்தி, முன்னாள் முதல்வர் ஜானகிராமன் மகன் ஆறுமுகம் உள்ளிட்டோர் தனியாக சென்று, சந்தித்தனர்.
இந்த மூன்று அணியினரிடமும் பேசிய ஜெகத்ரட்சகன், அனைவரையும் ஒருங்கிணைக்கத்தான் கட்சி தலைமை என்னை பொறுப்பாளராக நியமித்துள்ளது. ஆனால், நீங்கள் ஆரம்பித்திலேயே கோஷ்டி காணத்தை துவங்கினா எப்படிப்பா என புலம்பியபடி அறிவுரை கூறி அனுப்பியுள்ளார்.
இருப்பினும், ஜெகத்ரட்சகன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், 'ப' வைட்டமினுக்கு பஞ்சமிருக்காது என்பதால், நிர்வாகிகள் குஷியாக உள்ளனர்.