ADDED : ஜன 16, 2026 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் பொங்கல் விழா மற்றும் கோலப்போட்டியில் வென்ற மகளிர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் கோபால் முன்னிலை வகித்தார்.
தொகுதி செயலாளர் சக்திவேல், தொகுதி துணை செயலாளர் கண்ணதாசன், கிளை செயலாளர்கள் இளங்கோ, சரவணன் உள்ளிட்ட தி.மு.க., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் உருளையான்பேட்டை தொகுதி தி.மு.க., சார்பில் நடந்த கோலப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மகளிர்களுக்கு மாநில அமைப்பாளர் சிவா பரிசுகள் வழங்கி, வாழ்த்தினார்.
ஏற்பாடுகளை தொகுதி பொறுப்பாளர் கோபால் செய்திருந்தார்.

