தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்கிரசை கழற்றிவிட்டு தனித்து போட்டியிட தயாராகும் தி.மு.க.,

 காங்கிரசை கழற்றிவிட்டு தனித்து போட்டியிட தயாராகும் தி.மு.க.,

 காங்கிரசை கழற்றிவிட்டு தனித்து போட்டியிட தயாராகும் தி.மு.க.,


ADDED : பிப் 15, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரியில் முதல்வர் பதவியை அடைவதற்காக தி.மு.க., பல்வேறு முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இண்டி கூட்டணியில் உள்ள தி.மு.க., - காங்., இடையே தமிழகத்தில் இதுவரை கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையை துவக்கப்படாமல் இழுபறியாக இருந்து வருகிறது.

த.வெ.க., தரப்பில் கூறப்பட்டுள்ள 70 எம்.எல்.ஏ.,க்கள் சீட்டு, துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி உள்ளிட்டவை காங்., கட்சியை தி.மு.க., பக்கம் செல்ல முடியாத அளவிற்கு நிறுத்தி வைத்திருக்கிறது. காங்., கட்சியின் தமிழகத் தலைவர் செல்வபெருந்தகை மட்டுமே தி.மு.க., கூட்டணிக்கு வலியுறுத்தி வருகிறாரே தவிர ராகுல் கூட்டணி குறித்து எதுவும் இதுவரை கூறாமல் உள்ளார்.

இதனால் எரிச்சல் அடைந்துள்ள தி.மு.க., தலைமை கூட்டணி ஆட்சி கிடையாது என, பகிரங்கமாகவே தெரிவித்துள்ளது. இந்நிலையில் த.வெ.க.,வால் தங்களை மதிக்காமல் உள்ள காங்., கட்சிக்கு புதுச்சேரியில் அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் தி.மு.க., தலைமையிலேயே கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என, காங்., கட்சிக்கு வெளிப்படுத்தும் விதமாக தி.மு.க., பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில், தி.மு.க., தலைமையில் அமைக்கும் அமைச்சரவையில் முதல்வர் அல்லது உள்துறை அமைச்சர் பதவிகளை தி.மு.க.,வே வகிக்கும். இதற்கு கூடுதல் இடங்களில் வரும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வெற்றி வாய்ப்பு உள்ள வேட்பாளர்களை கண்டறியும் வேலையில் தி.மு.க., ரகசியமாக சர்வே நடத்தி வருகிறது.

கடந்த தேர்தல் போல் இல்லாமல் புதுச்சேரியில் கூட்டணியில் 15 இடங்கள் இல்லை என்றால், காங்., கட்சியை கழட்டிவிட்டு, 2 கம்யூ., வி.சி., கட்சியினருடன் தனித்து போட்டியிடுவது என, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

மேலும், கூட்டணிக்கு வராமல் முரண்டு பிடிக்கும் காங்., கட்சியை பற்றி சமூக வலைதளம் மற்றும் பொது இடங்களில் தி.மு.க.,வினர் விமர்சிக்க கூடாது என, கட்சி தலைமை கூறியுள்ள நிலையில் என்ன நடக்கப் போகிறது புதுச்சேரியில்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us