/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அனுமதியின்றி மணல் குவாரி தி.மு.க., பிரமுகருக்கு வலை
/
அனுமதியின்றி மணல் குவாரி தி.மு.க., பிரமுகருக்கு வலை
அனுமதியின்றி மணல் குவாரி தி.மு.க., பிரமுகருக்கு வலை
அனுமதியின்றி மணல் குவாரி தி.மு.க., பிரமுகருக்கு வலை
ADDED : ஜன 11, 2025 06:40 AM

கோட்டக்குப்பம்: அனுமதியின்றி குவாரி அமைத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட தி.மு.க., பிரமுகரை போலீசார் தேடிவருகின்றனர்.
மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் தனியார் இடத்தில் மணல் குவாரி அமைத்து மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யன் ஷூ நிகாம் மற்றும் அதிகாரிகள் நேற்று மாலை நடத்திய ஆய்வில், கீழ்புத்துப்பட்டில், அருள்ஜோதி என்பவரின் இடத்தில், மணல் குவாரி நடத்திய கும்பல், அதிகாரிகளை கண்டதும் தப்பிச் சென்றது.
விசாரணையில், தி.மு.க., மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உதயகுமார், தனது மனைவி பெயரில் உள்ள இடத்தில், மணல் குவாரி அமைத்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதையெடுத்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர் டிப்பர், ஒரு மினி லாரி, 2 டிப்பர் லாரி, பதிவெண் இல்லாத ஜே.சி.பி., வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வி.ஏ.ஓ., வேலு கொடுத்த புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மணல் கடத்தல் கும்பலை தேடிவருகின்றனர்.