/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலையை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
/
புதுச்சேரி பல்கலையை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி பல்கலையை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி பல்கலையை கண்டித்து தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 14, 2025 04:27 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்து, தி.மு.க., சார்பில் பல்கலை நுழைவு வாயில் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.எம்.எல்.ஏ.,க்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், உருளையன்பேட் டை தொகுதி பொறுப்பாளர் கோபால், மீனவர் அணி அமைப்பாளர் கோதண்டபாணி, இலக்கிய அணி துணை அமைப்பாளர் சோமசுந்தரம், தொகுதி நிர்வாகிகள் இளம்பரிதி, திருமாள், நாகலிங்கம், சர்மிளா, சிவக்குமார், அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தேர்வுக்கான செமஸ்டர் வினாத்தாளை தவறாக மாற்றி வழங்கி, மாணவர்களை குழப்பிய புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், பல்கலை.,க்கு துணை வேந்தரை நியமிக்காத மத்திய பா.ஜ., அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாநிலதுணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நந்தா சரவணன்,தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சண்குமரவேல், லோகையன், காந்தி, அருட்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர். தொகுதி செயலாளர் சத்தியவேல் நன்றி கூறினார்.