/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கோவில் திருப்பணிக்கு தி.மு.க., நிதியுதவி வழங்கல்
/
கோவில் திருப்பணிக்கு தி.மு.க., நிதியுதவி வழங்கல்
ADDED : ஜூன் 07, 2025 10:10 PM

புதுச்சேரி : அண்ணா சாலை, பெரியபாளையத்தம்மன் கோவில் திருப்பணிக்காக, ரூ. 1.03 லட்சம் நிதியுதவியை தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.
உருளையன்பேட்டை தொகுதி அண்ணா சாலையில் அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று (8ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, கோவில் திருப்பணிக்காக தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா அறிவுறுத்தலின்படி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் தனது சொந்த செலவில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை கோவில் அறங்காவலர் குழுவிடம் வழங்கினார்.
தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் சசிகுமார், வர்த்தக அணி குரு, இளைஞர் அணி ரெமி எட்வின், தாமரை, இலக்கிய அணி ஸ்ரீதர், சிறுபான்மையினர் அணி ஐசக், பொறியாளர் அணி அர்ஜுன், கிளை செயலாளர்கள் கிரி, நெல்சன், செந்தில், இருதயராஜ், சொல்தா ரவி, அகிலன், பிரகாஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.