/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., உணவு வழங்கல்
/
மழையால் பாதித்த மக்களுக்கு தி.மு.க., உணவு வழங்கல்
ADDED : டிச 03, 2025 05:56 AM

புதுச்சேரி: இந்திரா நகர் தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொகுதி தி.மு.க., பொறுப்பாளர் பசுபிக் சங்கர் உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
'டிட்வா' புயல் காரணமாக புதுச்சேரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மாநில தி.மு.க., அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவர் சிவா மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள், தார்ப் பாய்கள் உள்ளிட்ட உதவிகளை நேரில் சென்று வழங்க நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
அதன்படி, இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட காந்தி திருநல்லார், ஞானதியாகு நகர், ஜிப்மர் மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தி.மு.க., பொறுப்பாளர் பசுபிக் சங்கர் கடந்த இரண்டு நாட்களாக வீடு வீடாக சென்று உணவு வழங்கி வருகிறார். நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஆறுமுகம், செல்வம், சிவா, பிரபு, மூர்த்தி, ராஜி, பழனி ஆகியோர் உடனிருந்தனர்.

