/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாகூர் தொகுதியில் தி.மு.க., நிவாரண உதவிகள் வழங்கல்
/
பாகூர் தொகுதியில் தி.மு.க., நிவாரண உதவிகள் வழங்கல்
பாகூர் தொகுதியில் தி.மு.க., நிவாரண உதவிகள் வழங்கல்
பாகூர் தொகுதியில் தி.மு.க., நிவாரண உதவிகள் வழங்கல்
ADDED : டிச 10, 2024 06:35 AM

பாகூர்: கொம்மந்தான்மேடு, ஆராய்சிக்குப்பம் கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.
பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, பாகூர் பகுதியில் உள்ள கிராமங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து, வெள்ளம் பாதித்த கிராமத்தில், தி.மு.க., சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இரண்டாம் கட்டமாக, நேற்று பாகூர் தொகுதி கொம்மந்தான்மேடு, பெரிய ஆராய்ச்சிக்குப்பம், சின்ன ஆராய்ச்சிக்குப்பம் கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், எதிர்கட்சி தலைவர் சிவா, அவை தலைவர் எஸ்.பி., சிவக்குமார், எம்.எல்.ஏக்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார் பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், கோபால், மாறன், தங்கவேல், மகளிர் அணி காயத்திரி, அருள்செல்வி, சுமதி, கஸ்துாரி, மாநில விவசாய அணி தலைவர் ஆனந்தன், வர்த்தக அணி குரு, தகவல் தொழில்நுட்ப அணி தாமோ தமிழரசன், ரவிந்திரன், இலக்கிய அணி மாநில துணை அமைப்பாளர் கோதண்டபாணி, பாகூர் தொகுதி செயலாளர் பாண்டு அருக்கிஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.