/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புயல் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரண பொருட்கள்
/
புயல் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரண பொருட்கள்
புயல் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரண பொருட்கள்
புயல் பாதித்த மக்களுக்கு தி.மு.க., நிவாரண பொருட்கள்
ADDED : டிச 09, 2024 06:35 AM

புதுச்சேரி: புயல் பாதித்த புதுச்சேரி பகுதி மக்களுக்கு தி.மு.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
தி.மு.க., சார்பில், பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை அண்ணா அறிவாலயத்தில் இருந்து பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி,பெஞ்சல் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மக்களுக்கும் தி.மு.க., சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என, தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் புதுச்சேரி மக்களுக்கு 20 டன் அரிசி, 5,000 புடவை, 5,000 வேட்டி, 5,000 பாய்கள் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார்.
அதன்படி, நிவாரண பொருட்களை, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதுச்சேரி தி.மு.க., அமைப்பாளர் சிவாவிடம் வழங்கினார்.
தி.மு.க., அமைப்புச் செயலாளர் பாரதி, செய்தி தொடர்புத்துறை செயலாளர் இளங்கோவன், செந்தில்குமார் எம்.எல்.ஏ., உருளையன்பேட்டை தொகுதி செயலாளர் சக்திவேல் உடனிருந்தனர்.