ADDED : ஜன 18, 2025 06:42 AM

புதுச்சேரி : உழவர்கரை தொகுதி தி.மு.க., சார்பில் சமத்துவ பொங்கல் விழா ரெட்டியார்பாளையத்தில் நடந்தது.
தொகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த விழாவில், பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கரும்பு, வேட்டி, சேலை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி, தொகுதி அவைத் தலைவர் விஜயரங்கன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் சுகுமார், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் அன்புமாறன், மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் மாலா, மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் ஜான்சிராணி, அமுதவன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுப்ரமணி, வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் அன்புச்செல்வம், தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் சிவராமன், சந்தோஷ், சிறுபான்மை அணி மரிய ஜோசப்திவி, கிளைச் செயலாளர் செல்வராஜ், மாநில பிரதிநிதி அகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.