/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
/
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 14, 2026 05:43 AM

புதுச்சேரி: புதுச்சேரி தி.மு.க., மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில், சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
அண்ணா சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கண்டன உரையாற்றினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அருட்செல்வி முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்கிட வேண்டும்.
வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைக்கவும், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப் படுத்திட வலியுறுத்தப் பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, ஓம்சக்தி சேகர், செயற்குழு உறுப்பினர் லோகையன், அருட்செல்வி பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், சக்திவேல், வேலன், பிரபாகரன், இளம்பரிதி உட்பட பலர் பங்கேற்றனர்.

