தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பள்ளி வளாகத்தில் தூய்மை பணி தி.மு.க., இளைஞரணி அழைப்பு

பள்ளி வளாகத்தில் தூய்மை பணி தி.மு.க., இளைஞரணி அழைப்பு

பள்ளி வளாகத்தில் தூய்மை பணி தி.மு.க., இளைஞரணி அழைப்பு


ADDED : நவ 26, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி பள்ளி வளாகத்தில் தூய்மை பணிகளில், தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என தி.மு.க., இளைஞரணி வலியுருத்தி உள்ளது.

இது குறித்து, தி.மு.க, இளைஞரணி மாநில அமைப்பாளர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை; தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மக்கள் நலன் காக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் சமூகப் பணிகளை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது, புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், புதுச்சேரி தி.மு.க., இளைஞரணி சார்பில், ஒரு வாரத்திற்கு புதுச்சேரி முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் வளாகங்கள், சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்தி, டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வண்ணம் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்புக் குடிநீர் வழங்க வேண்டும். ரத்த தான முகாம் நடத்த வேண்டும். எனவே, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து துணை அமைப்பாளர்கள், தொகுதி அமைப்புகள் மற்றும் கிளைக் கழக இளைஞரணி நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை, மாணவர்களின் நலன் காக்கும் வாரமாக செயலாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us