/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூட்டணி கட்சிகளை தவிர்த்து தி.மு.க., தனியாக போராட்டம் புதுச்சேரியில் பரபரப்பு
/
கூட்டணி கட்சிகளை தவிர்த்து தி.மு.க., தனியாக போராட்டம் புதுச்சேரியில் பரபரப்பு
கூட்டணி கட்சிகளை தவிர்த்து தி.மு.க., தனியாக போராட்டம் புதுச்சேரியில் பரபரப்பு
கூட்டணி கட்சிகளை தவிர்த்து தி.மு.க., தனியாக போராட்டம் புதுச்சேரியில் பரபரப்பு
ADDED : பிப் 13, 2026 06:01 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் இண்டி கூட்டணியை சேர்ந்த தி.மு.க., தனியாக போராட்டம் நடத்தியதால் கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதையொட்டி புதுச்சேரியில் இண்டி கூட்டணி கட்சிகள் இந்திய.கம்யூ.,-மா.கம்யூ.-காங்.,- வி.சி., கட்சிகளின் தொழிற்சங்கங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் புதுச்சேரி புதிய பஸ் நிலையம் எதிரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, கம்யூ., மாநில செயலாளர் சலிம், நாரா கலைநாதன் மற்றும் காங்.,- வி.சி., கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். ஆனால், இந்த போராட்டத்தில் தி.மு.க.,வினர் பங்கேற்கவில்லை.
சட்டசபையில் நேற்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் நிகழ்ச்சியில் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றதால், போராட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட இண்டி கூட்டணி கட்சியினரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்ற பின்பு, நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் தலைமையில் ஊர்வலமாக வந்த தி.மு.க., வினர் பஸ் நிலையம் முன் தனியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
தமிழகத்தில் இண்டி கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை காரணமாக புதுச்சேரியில் இண்டி கூட்டணி கட்சிகள் நடத்திய போராட்டத்தை தி.மு.க.,வினர் தவிர்த்து தனியாக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. தி.மு.க., வின் இந்த அதிரடி நடவடிக்கை, கூட்டணி கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

