/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நுழைவு தேர்வில் தோல்வி: டாக்டர் தற்கொலை
/
நுழைவு தேர்வில் தோல்வி: டாக்டர் தற்கொலை
ADDED : ஆக 26, 2025 12:28 AM
புதுச்சேரி:
புதுச்சேரியில், மேற்படிப்பிற்கான நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஷ்பாபு, 24; எம்.பி.பி.எஸ்., முடித்துவிட்டு, மேற்படிப்புக்காக நுழைவு தேர்வு எழுதி இருந்தார்.
தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், மதிப்பெண் குறைவாக எடுத்திருந்தார். மனமுடைந்த வெங்கடேஷ்பாபு குடும்பதினர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
நேற்று காலை, மாடியில் அவரது அறையில் வெங்கடேஷ்பாபு இறந்து கிடந்தார். அருகில் மயக்க மருந்து பாட்டில்கள், ஊசிகள் இருந்துள்ளன.
அவர் மதிப்பெண் குறைந்ததால் விஷ மருந்தை ஊசியில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
இதுகுறித்து முதலியார் பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.