/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாக்டரிடம் ரூ. 49 லட்சம் 'அபேஸ்' ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை
/
டாக்டரிடம் ரூ. 49 லட்சம் 'அபேஸ்' ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை
டாக்டரிடம் ரூ. 49 லட்சம் 'அபேஸ்' ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை
டாக்டரிடம் ரூ. 49 லட்சம் 'அபேஸ்' ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை
ADDED : மார் 29, 2025 04:02 AM
புதுச்சேரி: போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, தனியார் கல்லுாரி டாக்டர் ரூ. 48.82 லட்சம் இழந்துள்ளார்.
புதுச்சேரி, பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மஹந்த்; தனியார் மருத்துவ கல்லுாரி டாக்டர். இவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார்.
அதைநம்பி பண்டாரு மஹந்த் 32 லட்சத்து 92 ஆயிரம் 424 ரூபாயை ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து ஏமாந்தார்.
இதனிடையே சில நாட்களுக்கு பிறகு, பண்டாரு மஹந்த் மெயில் ஐடிக்கு, மெயில் ஒன்று வந்தது. அதில், தங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் இழந்த பணத்தை மீட்டு தருவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, அந்த மெயிலுக்கு அவர், பதில் அளித்தார்.
அப்போது, மர்ம நபர் ஒருவர் பண்டாரு மஹந்தை தொடர்பு கொண்டு, டில்லியில் இருந்து போலீஸ் அதிகாரி பேசுவதாகவும், ஆன்லைனில் குழந்தைகள் ஆபாச வீடியோ பார்த்ததற்காக சைபர் கிரைம் போலீசார் தங்கள் மீது வழக்குப் பதிந்துள்ளதாக கூறியுள்ளார்.இவ்வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு மிரட்டினார்.
இதைநம்பிய பண்டாரு பல்வேறு தவணைகளாக 15 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் அனுப்பினார். இதன் மூலம் ஒரே நபர், இரண்டு முறை ஆன்லைன் மோசடி கும்பலிடம் 48 லட்சத்து 82 ஆயிரத்து 424 ரூபாய் இழந்துள்ளார்.
அதேபோல், கோரிமேடு சாந்தி, 65 ஆயிரம், முத்தியால்பேட்டை அருண்மொழி 20 ஆயிரம், வெங்கடா நகர் கலைவாணி 55 ஆயிரம் என, மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 50 லட்சத்து 22 ஆயிரத்து 424 ரூபாய் இழந்துள்ளார்.புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.