/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு
/
மருத்துவர் தினம் விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஜூலை 04, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கோரிமேட்டில் உள்ள அரசு மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவக் கல்லுாரியில் மருத்துவர் தினத்தை முன்னிட்டு, 'உப்பு மற்றும் இன்சுலின்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில் புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையின் தலைவர் முருகேசன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லுாரி முதல்வர் கென்னடி பாபு நோக்க உரையாற்றினார்.
வாய் மருத்துவம் மற்றும் கதிரியக்கவில் துறை தலைவர் சீனிவாசன் வரவேற்றார்.கருத்தரங்கில் கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கிளீனிக்கல் சொசைட்டி குழுவினர் செய்திருந்தனர்.