/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க உத்தரவு
/
24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க உத்தரவு
ADDED : நவ 29, 2024 04:04 AM
புதுச்சேரி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டுமென கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மீட்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்பு படையின் ஒரு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர். தேவைப்பட்டால் கூடுதலாக வீரர்கள் அழைக்கப்படுவர். மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளின் சார்பாக கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் மருத்துவ கல்லுாரிகள், தனியார் மருத்துவமனைகள் தங்களது ஆம்புலன்ஸ்களை வழங்க தயாராக உள்ளனர். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

