/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுவர்கள் உட்பட 4 பேரை கடித்து குதறிய நாய்
/
சிறுவர்கள் உட்பட 4 பேரை கடித்து குதறிய நாய்
ADDED : மார் 17, 2025 02:45 AM
புதுச்சேரி: புதுச்சேரி டி.ஆர்., நகரில் சிறுவர்கள் உட்பட 4 பேரை நாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நெல்லித்தோப்பு டி.ஆர்., நகர், 1, 2 மற்றும் 3வது குறுக்கு தெருகளில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. அதில், ஒரு நாய் கடந்த சில தினங்களாக, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கடித்து வருகிறது. நேற்று முன்தினம் 2 சிறுவர்களையும், நேற்று 2 பெரியவர்கள் என 4 பேரை கடித்து குதறியது.
தகவலறிந்த புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் அந்த நாயை பிடித்து ஊசி ஒன்றை செலுத்திவிட்டு, அங்கேயே விட்டு விட்டு சென்றனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாய்கள் தொல்லை குறித்து நகராட்சியில் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாய்க்கு ஊசி செலுத்தி இங்கேயே விட்டு சென்றதால், மீண்டும் பொதுமக்களை கடிக்கும் நிலை உள்ளது.
சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.