தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாண்டி மெரினாவில் கரை ஒதுங்கிய டால்பின்

 பாண்டி மெரினாவில் கரை ஒதுங்கிய டால்பின்

 பாண்டி மெரினாவில் கரை ஒதுங்கிய டால்பின்


ADDED : மே 03, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2026 05:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாண்டி மெரினாவில் இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.

துப்புராயப்பேட்டை, பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் நேற்று மாலை 5:30 மணியளவில், இறந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. டால்பின் 2.5 அடி நீளம், 7 கிலோ எடையும் இருந்தது.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பினை பொதுமக்கள் பார்க்க திரண்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த உயிர்காக்கும் ஊழியர் முத்துக்குமார், 32; டால்பின் கரை ஒதுங்கியது குறித்து வனத்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவலின்பேரில் வனத்துறை ஊழியர்கள் அங்கு சென்று இறந்த நிலையில் இருந்த டால்பினை எடுத்துச்சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us