தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வழக்குகளுக்கு பயப்படமாட்டேன் நேரு எம்.எல்.ஏ., வெளிப்படை

வழக்குகளுக்கு பயப்படமாட்டேன் நேரு எம்.எல்.ஏ., வெளிப்படை

வழக்குகளுக்கு பயப்படமாட்டேன் நேரு எம்.எல்.ஏ., வெளிப்படை


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வழக்குகளுக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது என நேரு எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

எனது தொகுதிகுட்பட்ட பெரிய மார்கெட்டில் வியாபாரம் செய்த பெண்ணிற்கு நடந்த கொடுமையை அரசு கண்டுகொள்ளவில்லை. இது குறித்து முதல்வர் மற்றும் சபாநாயகரிடம் மனு கொடுக்க சட்டசபை சென்றோம். பிரச்னை செய்ய செல்லவில்லை. மனு கொடுத்து விட்டு, அம்பேத்கர் சிலை ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்தோம். அப்போது வந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாரவிடம் பேச முயன்றபோது அவர் தவிர்த்தார்.

அமைச்சரவை என்பது கூட்டு பொறுப்பு. அவர் அலட்சிய படுத்தியதால், மக்கள் கேள்வி கேட்டனர். இந்த சூழலில் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் மனு அளிக்க சென்றேன். அப்போது அவரிடம் நீங்கள் செய்தது தவறு என வாக்கு வாதம் நடந்தது.

கடந்த காலங்களில் உங்கள் மீது கூட பழி சுமத்தியுள்ளனர். காலாவதி மருந்து ஊழலில் உங்கள் பெயர் உள்ளது. இதைப்பற்றி கூறி போராட்டம் நடத்தினால், நீங்கள் பதவியில் நீடிக்க முடியாது என கூறினேன். பின் இருவரும் சமாதானம் ஆகிவிட்டோம். இந்நிலையில் நான் நட்பாக பழக கூடிய மீனவ சமுதாய நண்பர்கள், நான் போராட்டம் நடத்திய இடத்தில் போராட்டம் நடத்தினர். அவர்களுக்காக நான் நிறைய இடத்தில் குரல் கொடுத்துள்ளேன். அவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில், 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நியமன எம்.எல்.ஏ.,க்களில்ஒருவரை மீனவ சமுதாயத்தில் இருந்த தேர்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறேன்.

என் மீது போலீசில் பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. வழக்குகளுக்கு பயப்படும் ஆள் நான் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us