/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கல்
/
மூதாட்டியின் கண்கள் தானமாக வழங்கல்
ADDED : நவ 10, 2025 11:17 PM

புதுச்சேரி: வயது மூப்பு காரணமாக உயிரிழந்த முதாட்டியின் கண்களை, அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.
புதுச்சேரி வெங்கட்டா நகர் வள்ளலார் சாலை சிவாலயா நகரை சேர்ந்தவர் ஜெயலட்சுமி 98; இவர், வயது மூப்பு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இவரது கண்களை தானம் செய்திட, அவரது மகன் ஓய்வு பெற்ற தலைமை செயலக கண்காணிப்பாளர் சீதாராமன், மருமகள் ஓய்வு பெற்ற ஆசிரியை ராஜே ஸ்வரி மற்றும் குடும்பத்தினர் முன் வந்து, அது குறித்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை சேர்மன் டாக்டர் லட்சுமிபதியை தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர், அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், அங்கு வந்த கண் மருத்துவர் பவித்ரா தலைமையிலான குழுவினர் ஜெயலட்சுமி குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெற்று, அவரது கண்களை தானமாக பெற்றனர்.

