/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணம் கேட்டு மிரட்டினால் நம்ப வேண்டாம் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

ADDED : நவ 22, 2024 05:24 AM
புதுச்சேரி: மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டினால் பொது மக்கள் நம்ப வேண்டாம் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி, மருத்துவக் கல்லுாரிக்கு பல்கலைக் கழகத் தேர்வு எழுத வந்த அவரது மகன் மற்றும் மூன்று மாணவர்கள் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க 1 லட்சம் பணம் வேண்டும் என, கேட்டுள்ளார்.
பணம் இல்லாதததால், அப்பெண் தான் மகனை தேடி தேர்வு மையத்திற்கு சென்று பார்த்தபோது, அவர் தேர்வு எழுதி கொண்டிருந்தார். இது குறித்து போலீசார் கூறுகையில், மாணவர்கள், பொதுமக்கள் யாரேனும் இதுபோன்று போதை பொருள் வைத்திருந்தற்காக டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளதாக தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டினால், அதை நம்பாதீர்கள்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.