/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆளும் கட்சியினரை காப்பாற்ற டி.ஓ.ஆர்., மறைப்பதாக குற்றச்சாட்டு
/
ஆளும் கட்சியினரை காப்பாற்ற டி.ஓ.ஆர்., மறைப்பதாக குற்றச்சாட்டு
ஆளும் கட்சியினரை காப்பாற்ற டி.ஓ.ஆர்., மறைப்பதாக குற்றச்சாட்டு
ஆளும் கட்சியினரை காப்பாற்ற டி.ஓ.ஆர்., மறைப்பதாக குற்றச்சாட்டு
ADDED : பிப் 09, 2025 06:13 AM
புதுச்சேரி போலீசில் பொறுப்பு ஏற்ற உயர் அதிகாரி போலீசில் பல மாற்றங்களை செய்து வருகிறார். ஒரு மாநிலத்தின் சிறப்பான சட்டம் ஒழுங்கு என்பது, குற்றம் நடந்த பின்பு வழக்கு பதிவு செய்வதில் கிடையாது. குற்றம் நடப்பதிற்கு முன்பு அதனை தடுக்க வேண்டும்.
குற்றம் நடந்துவிட்டால், வழக்கு பதிவு செய்து, குற்றவாளிக்கு சரியான தண்டனை பெற்று தர வேண்டும். ஆனால் புதுச்சேரியில் பதிவு செய்யப்படும் 50 சதவீத குற்ற வழக்குகளில், போலீசார் குற்றத்தை நிருபிப்பது கிடையாது.
குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு, காரைக்காலுக்கு போலீஸ் வேனில் துப்பாக்கி ஏந்திய 14 போலீஸ்காரர்களுடன் சென்ற ரவுடி ஜெகன், நோணாங்குப்பம் பாலத்தில் போலீஸ் கண் முன்னே மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி, வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலையாகினர். இதுபோல் ஏராளமான வழக்குகள் உதாரணத்திற்கு உள்ளது.
இதையெல்லாம் சரிசெய்ய முனைப்பு காட்டாத உயர் அதிகாரி, புதுச்சேரியில் தினசரி பதிவாகும் குற்ற வழக்கு குறிப்பு விபரங்களை வெளியிட தடை விதித்துள்ளார். இது குறித்த உயர் அதிகாரியிடம் கேட்டபோது, குற்ற வழக்கு விபரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அதற்கு என தனி ஆணையும் இல்லை. தினசரி எத்தனை வழக்கு பதிவு செய்யப்படுகின்ற எண்ணிக்கை மட்டும் தெரிவிப்போம் என கூறினார்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'தினசரி டி.ஓ.ஆர்., வெளியிட்டால் போலீசார் ரகசியமாக பதிவு செய்யும் பல குற்ற வழக்குகள் வெளியில் கசிந்து விடும்.
குற்ற வழக்கில் சிக்கி, கைதாகும் அரசியல் பிரமுகர்கள் பெயர்களும் வெளியே தெரிந்துவிடும். இதனை மறைப்பதற்காகவே ஆளும் கட்சியினரை காப்பாற்ற போலீஸ் செயல்படுவது, போலீஸ் மீதான பொதுமக்களின் நம்பதன்மை கேள்வி குறியாகி உள்ளது' என்றார்.