/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டாக்டர் பலாத்காரம் வாலிபருக்கு வலை
/
டாக்டர் பலாத்காரம் வாலிபருக்கு வலை
ADDED : அக் 20, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி, இடையார்பாளையத்தைச் சேர்ந்த பெண் மாற்றுத்திறனாளி டாக்டர் ஒருவரிடம், கடந்த 2020ம் ஆண்டு தொடர்பு கொண்ட ஏம்பலம் பாலசுப்ரமணி நகர் ராமசாமி மகன் இளங்கதிர் 37, என்பவர், அவரிடம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.
இதை நம்பி பெண் டாக்டர் அவரிடம் நெருக்கமாக பழகி உள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் டாக்டரை பலத்காரம் செய்து விட்டு திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். பின், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதற்கு அவரை, இளங்கதிர் தாக்கினார். இதுகுறித்து டாக்டர் அளித்த புகாரின் பேரில், மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, இளங்கதிரை தேடி வருகின்றனர்.