/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான வரைவு ஆலோசனை
/
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான வரைவு ஆலோசனை
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான வரைவு ஆலோசனை
கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான வரைவு ஆலோசனை
ADDED : டிச 02, 2025 04:46 AM

புதுச்சேரி: கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத் திற்கான வரைவு ஆலோசனை கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டசபை கேபினட் அறையில் நடந்தது.
புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயார் செய்வதற்காக அரசின் துறைகளான சுற்றுலா, மீன்வளம், அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் வனத்துறை ஆகிய துறைகளை உள்ளடக்கிய கலந்தாய்வுக் கூட்டம் முதல்வர் ரங்கசாமி தலைமையில் சட்டசபையில் உள்ள கேபினட் அறையில் நடந்தது.
கூட்டத்தில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், தலைமை செயலாளர் சரத்சவுகான், அறிவியல் தொழில்நுட்ப துறை செயலர் ஜவகர், சுற்றுலாத்துறை செயலாளர் மணிகண்டன், அறிவியல் தொழில்நுட்ப சிறப்பு செயலர் ஸ்மிதா, வன பாதுகாவலர் அருள்ராஜன், சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் சுற்றுலா திட்டங்களை மேற்கொள்வது, பிற துறைகளின் கடல் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வது குறித்து துறைகளின் கருத்துகள் முதல்வர் முன்னிலையில் சமர்பிக்கப்பட்டது.
முதல்வர் ரங்கசாமி கடற்கரை சார்ந்த சுற்றுலா திட்டங்கள், பிற துறைகளின் திட்டங்கள் அனைத்திற்கும் ஒப்புதல் பெறும் வகையில் கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட அறிக்கையை தயார் செய்து சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் திட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை தலைவர்களுக்கு உத்தரவிட்டார்.

