/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.47 லட்சத்தில் வாய்க்கால் பணி : சம்பத் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : டிச 27, 2025 05:37 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டையில் 47 லட்சம் ரூபாய் செலவில் வெள்ளம் வடிகால் வாய்க்கல் பணி துவக்கப்பட்டது.
மழைக்காலங்களில் முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள மூகாம்பிகை நகர், ராமானுஜர் நகர், வசந்தம் நகர் பகுதிகளை வெள்ளம் சூழ்கிறது. வெள்ளம் வடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொகுதி எம்.எம்.எல்.ஏ., சம்பத் முயற்சியில், முருங்கப்பாக்கம் ஏரி-3ம் கால்வாய் வழியாக முகாம்பிகை நகர் முதல் ராமானுஜர் நகர் வரை வெள்ள வடிகால் வாய்க்கால் ரூ.47,13,000 செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்கான பணி துவக்கம் நேற்று நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., சம்பத் பணிகளை துவக்கி வைத்தார். தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, நீர்ப்பாசனப் பிரிவு செயற் பொறியாளர் ராஜ்குமார், உதவி பொறியாளர் மதிவாணன், இளநிலை பொறியாளர் பிரித்திவிராஜ் கலந்து கொண்டனர்.
இப்பணியை பொதுப்பணித்துறை நீர்ப்பாசனப் பிரிவு வாயிலாக 3 மாத காலத்தில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.