ADDED : அக் 05, 2024 04:15 AM

புதுச்சேரி : புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழு சார்பில், நடந்த 17ம் ஆண்டு நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற நாடக்குழுகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
புதுச்சேரி ஆசிரியர் கலைக்குழுவின் நாடகப் போட்டி விழா தட்டாஞ் சாவடி அய்யனார் கோவில் திடலில் கடந்த 19ம் தேதி துவங்கியது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த 24 நாடகக் குழுக்கள் தினசரி பல்வேறு நாடகங்களை அரங்கேற்றினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடந்தது. அமைச்சர் திருமுருகன், புதுச்சேரி கலைச்சித்ரா கலைக் குழுவினரின் 'வலி' நாடகத்திற்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
2வது பரிசாக 15 ஆயிரம், 3வது பரிசாக 10 ஆயிரம், 4வது பரிசாக 5 ஆயிரம், சிறப்பு பரிசாக 5 குழுக்களுக்கு 3 ஆயிரம் வழங்கப்பட்டது.
கலைப் பண்பாட்டுத்துறை இயக்குனர் கலியபெருமாள், நேரு கல்வியல் கல்லுாரி தலைவர் ஜெயக்குமார், அருண் சர்மா தொண்டு நிறுவன பிரபா தேவி வீரராகு, பினான்சியல் சாப்ட்வேர் சிஸ்டம் அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, ஆசிரியர் கலைக்குழு செயலாளர் முருகேசன் வரவேற்றார்.
பொருளாளர் ராஜவேலு நன்றி கூறினார்.