sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாரில் ரவுடிகளுக்கு வேலை கூடாது கலால் விதியில் அதிரடி திருத்தம்

பாரில் ரவுடிகளுக்கு வேலை கூடாது கலால் விதியில் அதிரடி திருத்தம்

பாரில் ரவுடிகளுக்கு வேலை கூடாது கலால் விதியில் அதிரடி திருத்தம்


ADDED : ஏப் 01, 2025 04:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 04:03 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குற்றவாளிகளை மதுக்கடையில் வேலைக்கு வைக்கக்கூடாது என்று கலால் விதிகளில் திருத்தம் செய்த அரசாணை விரைவில் அமலாகிறது.

புதுச்சேரியில் சில்லரை மற்றும் மொத்த மதுபான கடைகள், ரெஸ்ட்ரோ பார்களுக்கு கலால் துறை அனுமதி தந்துள்ளது. இங்கு குற்றவாளிகள், ரவுடிகள் வேலைக்கு வைப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக அரசுக்கு புகார்கள் சென்றன.

சுற்றுலா பயணிகளிடம் மோதலும் ஏற்பட்டதாக போலீசுக்கு புகார்கள் சென்றன. சில மதுபானக் கடைகளில் உரிமையாளர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களை ஊக்கப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கலால் துறை விதிகளை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக கலால் துறை மற்றும் போலீஸ் வட்டாரத்தில் கூறுகையில், கவர்னர் உத்தரவின்படி, புதுச்சேரி கலால் விதி 1970-ன்படி விதி 14-ல் துணை விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இனி மதுபானக்கடை உரிமைதாரர் அல்லது அனுமதி வைத்திருப்போர் சட்ட விதிகள் படி குற்றத்துக்காக தண்டிக்கப்பட்ட எவரையும் பணியமர்த்தக்கூடாது. கலால் துறை செயலர் ஆஷிஷ் மதோராவ் மோர் இந்த ஆணையை அனுமதித்துள்ளார். இந்த உத்தரவு அதிகாரபூர்வ அரசிதழில் வெளியிட்ட பிறகு விரைவில் அமலுக்கு வரும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us