ADDED : ஏப் 11, 2026 03:58 AM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது.
நெட்டப்பாக்கம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், பாண்டுரங்கன், திரவுபதியம்மன், பிடாரியம்மன், அய்யனாரப்பன் கோவில் தீமிதி திருவிழா நேற்று துவங்கியது.
இதையொட்டி மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி, பிற்பகல் 2:30 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்தல், இரவு 8:00 மணிக்கு பிடாரியம்மன், அய்யனாரப்பன் சுவாமி வீதியுலா நடந்தது.
வரும் 15ம் தேதி இரவு 8:00 மணிக்கு அர்ச்சுனர்-திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. 17ம் தேதி பகல் 12 மணிக்கு அரவான் களபலி மற்றும் கோட்டை அழித்தல் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.
