ஏரிப்பாக்கத்தில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் திறப்பு
ஏரிப்பாக்கத்தில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் திறப்பு
ADDED : செப் 14, 2026 08:42 PM

நெட்டப்பாக்கம்: ஏரிப்பாக்கம் கிராமத்தில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்ததை அமைச்சர் ராஜவேலு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி ஏரிப்பாக்கம் காலனியில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் அமைச்சர் ராஜவேலுவிடம் தெரிவித்தனர். அதனையேற்று அமைச்சர் அப்பகுதியில் தனியார் கம்பெனி நிர்வாகத்திடம் பேசி, கம்பெனி சி.எஸ்.ஆர்., நிதியில் இருந்து புதிய குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன்பேரில் ஏரிப்பாக்கம் கிராமத்தில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கி புதிய குடிநீர் சுத்தகரிப்பு நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், என்.ஆர்.காங்., பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
