/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அ.தி.மு.க., நிர்வாகியை கொல்ல முயன்ற டிரைவர் கைது
/
அ.தி.மு.க., நிர்வாகியை கொல்ல முயன்ற டிரைவர் கைது
ADDED : டிச 30, 2024 06:10 AM

வானுார்: பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்த வழக்கில், சாட்சியம் அளித்த அ.தி.மு.க., கிளை செயலாளரை கொல்ல முயன்ற டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் அடுத்த கரசானுார் தருமகுளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்,50; அ.தி.மு.க., கிளை செயலாளர். இவருக்கும், அதே பகுதியில் மயிலம் ரோட்டில் வசிக்கும் டிரைவர் பிரபாகரனுக்கும், முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில் பிரபாகர்,38; மீதுள்ள பெண் பலாத்கார முயற்சி வழக்கில், ராமச்சந்திரன் கோர்ட்டில் சாட்சியம் அளித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த ராமச்சந்திரனை, பிரபாகரன் கத்தியால், தலை, கழுத்தில் வெட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
படுகாயமடைந்த ராமச்சந்திரன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வானுார் போலீசார் வழக்கு பதிந்து, பிரபாகரனை நேற்று கைது செய்தனர்.