/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இலவச பட்டா வழங்காததால் டிரைவர் தற்கொலை முயற்சி
/
இலவச பட்டா வழங்காததால் டிரைவர் தற்கொலை முயற்சி
ADDED : மார் 13, 2026 06:30 AM
அரியாங்குப்பம்: தவளங்குப்பத்தில் இலவச மனைப்பட்ட வழங்காத மனவிரக்தியில் தனியார் பஸ் டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில், நேற்று காலை 10:30 மணிளவில், ஒருவர் பாட்டிலில் கொண்டு வந்த டீசலை திடீரென தனது உடலில் ஊற்றி, தீக்குளிக்கப் போவதாக தெரிவித்தார். அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து, உடலில் தண்ணீர் ஊற்றி உட்கார வைத்தனர். தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் அவரை, போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர்.
அவர், கடலுார் அடுத்த ராம்பாக்கத்தை சேர்ந்த ஆனந்தகுமார், 46, தனியார் பஸ் டிரைவர் என்பதும், தனது மாமனார் ஊரான தவளக்குப்பம், தானாம்பாளைத்தில் வாடகை வீட்டில் மனைவியுடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் இவர், இலவச மனைப்பட்டாவிற்கு விண்ணப்பித்திருந்தார். மனைப்பட்டா வழங்காததால், மனவிரக்தியில் தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

