UPDATED : மே 06, 2026 06:18 PM
ADDED : மே 06, 2026 06:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடலுார் மாவட்டத்தை சேர்ந்த ஆக்டிங் டிரைவர் புதுச்சேரியில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், கீழப்பரம்பை, கிழக்குத் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார், 46; டிரைவர். இவருக்கு, கவிதா என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். விஜயகுமார், புதுச்சேரியில் உள்ள பல்வேறு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஆக்டிங் டிரைவராக பல நாட்கள் அங்கேயே தங்கி வேலை செய்வது வழக்கம்.
இவர் (மே 5)புதுச்சேரி, திருவள்ளுவர் சாலையில் உள்ள சலுான் கடை அதிக மது போதையில் இறந்து கிடந்தார். உருளையன்பேட்டை போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

