/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
/
மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
மாணவிக்கு பாலியல் தொல்லை டிரைவருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : பிப் 06, 2026 08:27 AM

காரைக்கால்: காரைக்காலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப் பட்டது.
புதுச்சேரி, காரைக்கால் வள்ளல் சீதக்காதி தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் மகன் இப்ராஹிம், 28; மினி லோடு வேன் டிரைவர். இவர், கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வீட்டில் தனியாக இருந்த 16 வயது பிளஸ் 1 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர், காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், இப்ராஹிம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து, இப்ராஹிமை கைது செய்தனர்.
காரைக்கால் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிந்து, மாவட்ட சிறப்பு நீதிபதி மோகன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இதில் குற்றவாளி இப்ராஹிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

