/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 2 நாள் 'ட்ரோன்' பறக்க தடை
/
புதுச்சேரியில் 2 நாள் 'ட்ரோன்' பறக்க தடை
ADDED : ஜன 28, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு இன்று 28ம் தேதி இரவு 6:45 மணிக்கு துணை ஜனாதிபதி வருகை தந்து மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார். இதனையொட்டி, புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் இன்று 28ம்தேதி நாளை 29ம் தேதி ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ள உத்தரவில், துணை ஜனாதிபதி வருகையொட்டி, வான் வழியாக படம் எடுக்க பயன்படுத்தும் மனித இயக்கம் இல்லாத எந்த வகையான வான்வெளி வாகனங்கள், ட்ரோன்கள், பலுான்கள் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் பறக்க குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

