ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி துவக்கம்
ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி துவக்கம்
ADDED : செப் 27, 2026 05:56 AM

உழவர்கரை நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரிய வாய்க்கால்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் நடந்தது.
புதுச்சேரி சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உழவர்கரை நகராட்சி சார்பில் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதில், நகராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய வாய்க்கால்கள் மற்றும் மனிதர்கள் நேரடியாகச் சென்று மருந்து தெளிக்க முடியாத அடர்ந்த நீர்நிலைகளில், ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நேற்று துவங்கப்பட்டது. ஆணையர் அருண் அய்யாவு உத்தவிரன் பேரில், நகராட்சி ஊழியர்கள் நேரடியாக நடந்து சென்று மருந்து தெளிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்த்து, அகலமான வாய்க்கால்கள் மற்றும் ஆகாயத்தாமரை நிறைந்துள்ள பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் குறுகிய காலத்தில் துல்லியமாக மருந்து தெளித்தனர்.
நகராட்சியின் நவீன மற்றும் விரைவான நடவடிக்கையின் மூலம் குடியிருப்புப் பகுதிகளில் கொசு உற்பத்தி கணிசமாகக் குறைந்து, நோய் பரவல் தடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
