தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்


ADDED : மே 01, 2025 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2025 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புகையிலை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், சீனியர் எஸ்.பி., கலைவாணன், கடலோர காவல் படை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில், துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, சீனியர் எஸ்.பி., கலைவாணன், ஏப்ரல் மாதத்தில் மட்டும் 9 கிலோ கஞ்சா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், 'புகை பிடிப்பதற்கு எதிரான நோட்டீஸ்களை பள்ளி மற்றும் கல்லுாரிகளின் முக்கிய இடங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புகையிலைப் பொருட்கள் விற்கும் பெட்டி கடைகள் மீது நடவடிக்கை எடுத்து, அதனை மூடுவதற்கு நகராட்சி நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மூலம் கிராமப் பகுதிகளில் போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருளுக்கு எதிரான மியூசியத்திற்கு அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார்.

மேலும், போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் 94892 05100 என்ற மொபைல் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us