நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால் : காரைக்காலில் பொதுஇடத்தில் குடிபோதையில் ஆபாசமாக பேசிய நபரை போலீசார் கைதுசெய்தனர்.
காரைக்கால் திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது குடிபோதையில் கோவிலுக்கு செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசிய நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.
திருநள்ளாறு தக்களூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சிலம்பரசன், 38; என்று தெரியவந்தது. இவர் மீது திருநள்ளாறு போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.