ADDED : ஜூன் 23, 2025 05:06 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் பரோட்டா சாப்பிட்ட நபர் இறந்தார்.
காரைக்கால், நிரவி மதகடி தோமாஸ் அருள்திடல் பகுதியை சேர்ந்தவர் செல்வராணி மகன் ஜெனிபர்தாஸ், 32; கூலி தொழிலாளி. இவர், தினமும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது வழக்கம். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதித்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திய அவர், பரோட்டா சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை பார்த்தபோது ஜெனிபர்தாஸ் மயங்கிக் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
