UPDATED : மே 03, 2026 08:38 PM
ADDED : மே 03, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: குடிபோதையில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முருங்கப்பாக்கம், கடலுார் மெயின்ரோடு சேர்ந்தவர் சிவம், 50. இவர் வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து குடித்து வந்தார். இந்நிலையில், மே 2 இரவு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் சாப்பிடாமல் துாங்கினார்.
மே 3 காலை அவரது மனைவி அன்னமேரி எழுப்பியபோது, சிவம் அசைவின்றி இருந்தார். அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர் பரிசோதித்து, சிவம் இறந்ததை உறுதி செய்தனர்.
புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
