ஜீவானந்தம் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு முகாம்
ஜீவானந்தம் அரசு பள்ளியில் போதை விழிப்புணர்வு முகாம்
ADDED : அக் 22, 2024 05:45 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி:' காரமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கிட்லா சத்தியநாராயணன், மாணவர்களுக்கு போதை பழக்க விளைவுகள் மற்றும் அதன் தீங்குகள் குறித்து விளக்கினார்.
வழக்கறிஞர் பிரசாந்த் மாணவர்களுக்கு போதை பொருள் பழக்கத்தினால் ஏற்படும் சட்ட விளைவுகள் குறித்து விளக்கினார்.
தலைமையாசிரியர் பாரி நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை பள்ளி விரிவுரையாளர் ஜீவராஜி செய்திருந்தார்.
