தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் மண்ணாடிப்பட்டு அணி சாம்பியன்

 போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் மண்ணாடிப்பட்டு அணி சாம்பியன்

 போதைப்பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் மண்ணாடிப்பட்டு அணி சாம்பியன்


ADDED : ஆக 31, 2026 09:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 09:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டியில், மண்ணாடிப்பட்டு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கோரிமேடு போலீஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றுகளின் முடிவில், ஆலங்குப்பம் அணியும் மண்ணாடிப்பட்டு அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மண்ணாடிப்பட்டு அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்கள் எடுத்தது. அணியின் ராஜேஷ், 34 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஆலங்குப்பம் அணி, மண்ணாடிப்பட்டு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

மண்ணாடிப்பட்டு அணியின் கலையரசன் சிறப்பாக பந்துவீசி, 3.2 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மண்ணாடிப்பட்டு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

கலையரசன் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆலங்குப்பத்தைச் சேர்ந்த 16 வயது மாணவர் நிதிஷ் 'சிறந்த வளரும் வீரர்' விருது மற்றும் சிறப்பு பரிசு பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us