/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 25, 2025 01:17 AM

திருக்கனுார் : திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் சமுதாய நலப்பணித் திட்டம், சாரண -சாரணியர் இயக்கம் மற்றும் தேசிய மாணவர் படை சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமைதாங்கினார். துணை முதல்வர் சுசிலா சம்பத்,ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பள்ளியின் நிர்வாக இயக்குநர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
பள்ளி வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் திருக்கனுார் காந்தி வீதி, பிள்ளையார் கோவில் வீதி, வணிகர் வீதி வழியாக கடை வீதிக்கு சென்று மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் மாணவ, மாணவிகள் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டன. பின், மாணவர்களுக்கு இடையே கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.பள்ளியின் நிர்வாக இயக்குநர் ஹரிஷ்குமார் நன்றி கூறினார்.ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை பள்ளியின்பொறுப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.