ADDED : அக் 30, 2024 04:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : லாஸ்பேட்டை தாகூர் கலை அறிவியல் கல்லுாரி, சமூகவியல் துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
துறை தலைவர் எப்சிபா தலைமை தாங்கினார். தாகூர் கல்லுாரியின் சமூகவியல் துறையின் முன்னாள் மாணவர் சப்இன்ஸ்பெக்டர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, போதை மற்றும் மது பழக்கத்தினால் ஏற்படும் சமூக விளைவுகள் குறித்தும், உடல் மற்றும் மன ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், மது பழக்கத்தால் ஏற்படும் சமூக பிரச்னைகள் குறித்தும் பேசினார்.
மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் சமூகவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

