/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுமக்களுக்கு இடையூறு போதை வாலிபர் கைது
/
பொதுமக்களுக்கு இடையூறு போதை வாலிபர் கைது
ADDED : ஆக 18, 2025 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்த போதை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை போலீஸ் ஏட்டு வீரப்பன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் காலை கொம்பாக்கம் - வில்லியனுார் மெயின்ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள செங்கேணியம்மன் கோவில் அருகே வாலிபர் ஒருவர் குடிபோதையில் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், புதுச்சேரி பாப்பாஞ்சாவடியை சேர்ந்த தமிழ்செல்வன், 34, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

