/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
/
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
ADDED : மே 20, 2025 06:42 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சமூக நலத்துறை, பாரத மாதா ஒருங்கிணைந்த மது போதை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் போதைப் பொருள் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.
கம்பன் கலையரங்கம் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சமூக நலத்துறை செயலர் சுந்தரேசன், இயக்குனர் ராகினி, கள அதிகாரி கருணாநிதி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
முன்னதாக துணை இயக்குனர் ஆறுமுகம் வரவேற்றார்.
கம்பன் கலையரங்கம் அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணி புஸ்சி வீதி வழியாக சென்று, கடற்கரை சாலை காந்தி திடலில் முடிவடைந்தது. பேரணியில் மணக்குள விநாயகர், விநாயகா மிஷன், இந்திராணி, ஏ.ஜி.பத்மாவதி மற்றும் ராக் செவிலியர் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று, போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.