sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய சிறையில் போதைப் பொருட்கள் பறிமுதல்

மத்திய சிறையில் போதைப் பொருட்கள் பறிமுதல்

மத்திய சிறையில் போதைப் பொருட்கள் பறிமுதல்


ADDED : ஜூலை 27, 2025 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 07:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : காலப்பட்டு மத்திய சிறையில் சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நடத்திய சோதனையில் குட்கா, கஞ்சா, மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

காலப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைத் துறை மற்றும் புதுச்சேரி காவல்துறை மூலம் அவ்வப்போது சிறையில் பரிசோதனை செய்வது வழக்கம்.

புதுச்சேரி காவல் துறையில் இயங்கி வரும் எஸ்.டி.எப்., மூலம் சிறைக்குள்ளே தடை செய்யப்பட்ட பொருட்கள் வீசப்பட்டதாக சிறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் சிறை முழுதும் சோதனை நடத்தினர்.

சிறையின் சமையல் கூட பகுதியில் ஹான்ஸ் 50 பாக்கெட், 30 பீடி கட்டு, கஞ்சா லைட்டர் மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

விசாரணையில் சில நாட்களுக்கு முன், சிறையில் இருந்து ஜாமீனில் சென்ற ரிஷி குமார், ஆனந்த் ஆகியோர் நள்ளிரவில் முதலாவதாக உள்ள சிறை காம்பவுண்ட் ஏறி குதித்து உள்ளே சென்று, இரண்டாவது காம்பவுண்ட் உள்ளே வீசியுள்ளனர். சிறையில் உள்ள தாடி அய்யனார், சத்யா ஆகியோருக்கு போதைப் பொருள் வீசியது தெரியவந்தது. போதைப் பொருட்கள் சமையல் கூட பகுதியில் வேலை செய்யும் சிறைவாசிகள் மூலம் வினியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us