/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிபோதையில் தகராறு:7 பேர் கைது
/
குடிபோதையில் தகராறு:7 பேர் கைது
ADDED : நவ 25, 2024 05:26 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்த, 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒதியஞ்சாலை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட, பழைய துறைமுக வாகன நிறுத்தும் இடத்தில், சிலர் பொதுமக்களிடத்தில் தகராறில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் தலைமையிலான போலீசார்சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது அங்கு மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட உப்பளம் பகுதியை சேர்ந்த அருண்,40; வம்பா கீரப்பாளையம் பகுதியை சேர்ந்த வினோத், 30; செல்வம், 50; குமரன், 48; சென்னையை சேர்ந்த ரஞ்சித், 42; நல்லவாடு பகுதியை சேர்ந்த சாரதி, 30; இன்ஜினியர்ஸ் தோட்டம் பகுதியை சேர்ந்த ஷயாத்,30 ஆகிய, 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.